அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியமான முதுமைக்கும் நம்பிக்கை அளிக்கும் அடுத்த தலைமுறை புரோபயோடிக் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்
Posted On:
11 FEB 2022 1:16PM by PIB Chennai
ஆரோக்கியமான முதுமையை ஊக்குவிப்பதில் பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்திய பால் பொருட்களிலிருந்து அடுத்த தலைமுறை புரோபயோடிக் பாக்டீரியமான லாக்டோபாகிலஸ் பிளாண்டரம் ஜேபிசி50-ஐ இந்திய விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் கண்டறிந்துள்ளது.
இந்த புரோபயாடிக் பாக்டீரியத்தைப் பயன்படுத்தி தயிர் (யோகர்ட்) வகை ஒன்று அக்குழு உருவாக்கியுள்ளது, ஆரோக்கிய நன்மைகளை பெற விரும்புவோர் இதை உட்கொள்ளலாம்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த மேம்பட்ட ஆய்வுக்கான நிறுவனம் (ஐஏஎஸ்எஸ்டி), கவுகாத்தியை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இதை கண்டறிந்துள்ளது.
கவுகாத்தி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம் சி கலிதா, ஆராய்ச்சியாளர்கள் திரு அருண்குமார் மற்றும் திருமிகு துள்சி ஜோய்ஷி ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு இணை பேராசிரியர் டாக்டர் மோஜிபுர் ஆர் கான் மற்றும் இயக்குநர் பேராசிரியர் ஆஷிஸ் கே முகர்ஜி ஆகியோர் தலைமை வகித்தனர்.
வெளியீட்டு இணைப்பு: https://doi.org/10.3390/antiox11020268
மேலும் விவரங்களுக்கு, டாக்டர் மோஜிபுர் ஆர் கானை (mojibur.khan@iasst.gov.in) தொடர்பு கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1797552
(Release ID: 1797621)
Visitor Counter : 368