அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மருத்துவ ரீதியான முக்கிய பொருள் தயாரிப்பில் பசுமை தொழில்நுட்பத்திற்காக சென்னையை சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது

Posted On: 11 FEB 2022 1:18PM by PIB Chennai

பென்சோ(பி)தியோஃபென் எனப்படும் மருத்துவ ரீதியான பொருள் தயாரிப்பில் பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சென்னை ஐஐடி-யின் வேதியியல் துறை விஞ்ஞானி டாக்டர் இ பூங்குழலிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. 

(எலும்புப்புரை நோய்க்கு பயன்படுத்தும்) ரெலோக்ஸிஃபென், (ஆஸ்துமா நோய்க்கு பயன்படுத்தும்) ஸிலியுடோன், (பூஞ்சைக்கு எதிரான மருந்தாக பயன்படுத்தும்) செர்டாகொனாசோல் போன்ற மருந்துகளில் இடம்பெற்றுள்ள இந்த பொருள் ஆபத்தான  தொழில் முறை உற்பத்தியில் இருந்து மாற்றுப்பொருளாக தயாரிக்கப்படுகிறது. 

மருத்துவ ரீதியில் முக்கியமான 2-ஆஸில் பென்சோ(பி)தியோஃபென் பொருட்களை வணிக ரீதியாக கிடைக்கச் செய்வதில் டாக்டர் பூங்குழலி வெற்றி பெற்றுள்ளார்.  புதிய நடைமுறையில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.   அறையின் வெப்பத்தில் வைக்கக்கூடிய, மணமில்லாததாக, திறந்தவெளிச் சூழலில்  வைக்கக்கூடிய அதிக செலவு பிடிக்காத பொருட்களாக இவை வணிக ரீதியில் கிடைக்கின்றன. 

இந்த நடைமுறையின் பின்னால் உள்ள அறிவியல் பற்றி விவரித்த டாக்டர் பூங்குழலி, தண்ணீரை இதற்கு பயன்படுத்துவதால், வேதி கரைப்பான் தேவையில்லை என்றார்.   இதுதவிர, காற்று மாசு இருக்காது.   அறையின் வெப்பத்தில் வைப்பது எரிசக்தியை  மிச்சப்படுத்துகிறது.   உபபொருளான தையோலேட் பயன்பாடு நடைமுறைக்கு வரவிருக்கிறது. 

“ஆபத்து விளைவிக்கும் நடைமுறைகளை மாற்றி  பசுமை தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க எனது குடும்பம் ஊக்கமளித்தது.  மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் எனது ஆராய்ச்சிப் பணியை நான் தொடங்கியபோது, பேராசிரியர்  ஜி சேகர், பேராசிரியர் ரமேஷ் எல். கர்தாஸ் ஆகியோரின் உதவியுடன் பசுமை தொழில்நுட்பத்தை நான் வடிவமைத்தேன்” என்று டாக்டர் பூங்குழலி கூறினார்.

“எனது வாழ்க்கை எனது மகனையும், எனது ஆராய்ச்சியையும் சுற்றியுள்ளது. இதுவரை நான் எதிர்கொண்ட பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கும், எனது ஆராய்ச்சிக்கான நேரத்தை செலவிடுவதற்கும் எனது மகனின் ஆதரவு உதவி செய்தது” என்று டாக்டர் பூங்குழலி மேலும் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797554

***************



(Release ID: 1797598) Visitor Counter : 236


Read this release in: English , Urdu , Hindi , Bengali