சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஏழைகளுக்கு எளிதில் நீதி கிடைப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்

Posted On: 10 FEB 2022 4:11PM by PIB Chennai

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

சாதாரண மக்களுக்கு குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு இலவச மற்றும் திறமையான சட்ட சேவைகளை சட்ட சேவைகள் ஆணையங்கள் சட்டம், 1987 வழங்குகிறது.

தாலுகா நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை சட்ட சேவை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஏப்ரல் 2021 முதல் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில், 60.17 லட்சம் நபர்களுக்கு இலவச சட்டச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் 132.37 லட்சம் வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள், கண்காணிப்பு இல்லங்கள், சிறார் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் சட்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நீதிக்கான சமமான அணுகலை செயல்படுத்த, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797204

********(Release ID: 1797402) Visitor Counter : 141


Read this release in: English , Urdu , Bengali