புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் உள்ள கடல்சார் குப்பை நிலவரம்

Posted On: 10 FEB 2022 4:49PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களைவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று, எழுத்து பூர்வமாக பதில் அளித்த அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

9 கடலோர மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 2018, 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் புவி அறிவியல் அமைச்சகத்தின் இணைப்பு அலுவலகமான கடலோரா ஆராய்ச்சிக்கான தேசிய மையம் கடலோரங்களில் தூய்மைப்  பணிகளை மேற்கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.  மற்றும் கடற்கரையில் குப்பையின் அளவு குறித்தும் ஆய்வுகள்  மேற்கொள்கிறது.

இந்தியாவின் தென்கிழக்குப்  பகுதியில் கடற்கரைகளில், சிந்திக் கிடைக்கும் குப்பைகள் மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்புகள் குறித்து  ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் சேரும் இடங்களில், மைக்ரோபிளாஸ்டிக் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் சேரும் இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன.

தேசிய கடல்சார் குப்பைக்  கொள்கையை உருவாக்க கீழ்கண்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

 

இந்தியக்  கடலோரப்  பகுதிகள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில், குப்பைகளின் நிலவரைத்தைக்  கண்காணிக்கும் பணியைக்   கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம்  தொடங்கியுள்ளது.  மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள், கழிவுநீர் கால்வாய்கள் மூலம்  மழை நீர் கடலுக்குள் கலப்பதால் கடலில் குப்பை சேருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், தேசியக்  கடல்சார் குப்பைக்   கொள்கையை உருவாக்குவதற்கான திட்டம் தயாரிக்க பல ஆராய்ச்சி மையங்களின் விஞ்ஞானிகள், கல்வி நிறுவனங்களின் நிபுணர்கள் கலந்து கொள்ளும் வகையில் வகையில்  தேசிய அளவிலான பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், உணவு பொட்டலங்களின் உறைகள், மீன்பிடி வலைகள், மதுபாட்டில்கள், காலணிகள், முககவசம் உள்ளிட்ட துணிகள், காகிதங்கள, உலோகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட பலவகையான பொருட்கள் கடலில் குப்பைகளாக சேர்கின்றன.

இதனால் கடலோர மாநிலங்களில் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க கடந்த 4 ஆண்டுகளில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

* கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

*  கடல் மாசு குறித்த கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளால்  கடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.

 

* கடல் குப்பைகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்க, ஒரு முறைப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797248

***********


(Release ID: 1797364)
Read this release in: English , Urdu