சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாட்டில் மின்-கழிவு மேலாண்மை
प्रविष्टि तिथि:
10 FEB 2022 1:27PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
மின்-கழிவு (மேலாண்மை) விதிகள், 2016-ன் கீழ், 21 வகையான மின் மற்றும் மின்னணு சாதனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகள் தங்கள் வாழ்நாளின் முடிவில் மின்-கழிவு ஆகிவிடும்/
நாடு முழுவதும் 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய நிதியாண்டுகளில், முறையே 7,08,445 டன், 7,71,215 மற்றும் 10,14,961.2 டன் மின் கழிவு உருவானது.
அபாயகரமான மற்றும் பிற கழிவுகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை தாண்டிய போக்குவரத்து) விதிகள், 2016-ன் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
04-04-2016 முதல் மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் நாட்டில் மின் மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக மின்-கழிவுகள் அதிகரிப்பு காணப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797145
(रिलीज़ आईडी: 1797252)
आगंतुक पटल : 884