நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு: தமிழகத்தின் விநியோக விவரம்

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2022 5:49PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக  பதில் அளித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் திரு. அஷ்வினி குமார் சவுபே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

 

'தற்சார்பு இந்தியா தொகுப்பின்' கீழ் மே 2020-ல் அரசு அறிவித்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு இணங்க, அனைத்து மாநிலங்களுக்கும் / யூனியன் பிரதேசங்களுக்கும் 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை விநியோகத்துறை இலவசமாக விநியோகித்தது.

 

2.8 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள்/மத்திய சரக்குகளில் இருந்து மொத்தம் 6.4 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் (தமிழ்நாடு உட்பட) கொண்டு  சென்றுள்ளன.

 

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 1,449 மெட்ரிக் டன் உணவு தானியங்களை தமிழ்நாடு விநியோகித்துள்ளது. 34,286 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தமிழகத்தில் விநியோகிக்கப்படாமல்  இருந்ததை தொடர்ந்த தேசிய உணவு பாதுகாப்பு சட்ட வழங்கலுடன் சரிசெய்யப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

(ANBS) https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796905

                                                                                *****************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1797022) வருகையாளர் எண்ணிக்கை : 229
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Manipuri