பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

प्रविष्टि तिथि: 09 FEB 2022 3:39PM by PIB Chennai

 நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி  கூறியதாவது

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தகவலை, தேசிய குற்ற ஆவண காப்பகம், ‘இந்தியாவில் குற்றம்’ என்ற இதழில் வெளியிடுகிறது.  அதில் உள்ள தகவல்களின்படிநாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக கடந்த 2019ம் ஆண்டில் 4,05,326 குற்றங்களும், 2020ம் ஆண்டில், 3,71,503 குற்றங்களும்  பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதை இந்த தரவு காட்டுகிறது.

காவல் மற்றும் சட்டம் ஒழுங்கு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம்.  ஆனாலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. குற்றவியல் சட்ட திருத்தம் 2018, குற்றவியல்  சட்ட திருத்தம்  2013  ,பணி செய்யும் இடங்களில் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டம் 2013, குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2006, வரதட்சணை தடுப்பு சட்டம் 1961 ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796830

                                **********

 


(रिलीज़ आईडी: 1796966) आगंतुक पटल : 2407
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Malayalam