சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் தாய் சேய் இறப்பு விகிதம்: தமிழக நிலவரம்
Posted On:
08 FEB 2022 12:35PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
இந்திய தலைமை பதிவாளரின் மாதிரி பதிவு அமைப்பு அறிக்கையின் படி, குழந்தை இறப்பு விகிதம் 2015-ல் 1000 பிறப்புகளுக்கு 37-ல் இருந்து 2019-ல் தேசிய அளவில் 1,000 பிறப்புகளுக்கு 30 ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2015-ல் 19 ஆக இருந்த 1000 பிறப்புகளுக்கான இறப்பு விகிதம், 2016-ல் 17 ஆகவும், 2017-ல் 16 ஆகவும், 2018-ல் 15 ஆகவும், 2019-ல் 15 ஆகவும் இருந்தது.
இந்திய தலைமை பதிவாளரின் மாதிரி பதிவு அமைப்பு அறிக்கையின் படி, தாய்மார்கள் இறப்பு விகிதம் 2015-17-ல் 8.1-ல் இருந்து 2016-18-ல் தேசிய அளவில் 7.3 ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2015-17-ல் 4.8 ஆக இருந்த தாய்மார்கள் இறப்பு விகிதம், 2016-18-ல் 3.2 ஆக இருந்தது. தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆதரவளித்து வருகிறது. பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796436
***************
(Release ID: 1796545)
Visitor Counter : 1391