குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இளைஞர்களுக்கு குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் பட்டியல் பிரிவினர்/பழங்குடியினர் தொழில் முனைவோர் பயிற்சி
Posted On:
07 FEB 2022 3:51PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு. நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.
இளம் பெண்கள் மற்றும் பட்டியல் பிரிவினர்/பழங்குடியினர் உள்ளிட்ட இளைஞர்கள் சிறு தொழில்களை திறம்பட நடத்துவதற்காக பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சி திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் நடத்தியுள்ளது.
இளைஞர்களின் திறமையை வளர்ப்பதில் தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம் கவனம் செலுத்துகிறது. ஒரு நிறுவனத்தை கட்டமைப்பதற்குத் தேவையான பல்வேறு அம்சங்களை அவர்களுக்கு உணர்த்துகிறது.
சுயதொழில் அல்லது தொழில்முனைவை நோக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது, புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பது, தற்போதுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் திறனை வளர்ப்பது மற்றும் நாட்டில் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796142
************
(Release ID: 1796262)