குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பெண் தொழில்முனைவோர்

இடுகை இடப்பட்ட நாள்: 07 FEB 2022 3:57PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு. நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார். 

01/04/2019 முதல் 02/02/2022 வரையிலான காலகட்டத்தில், ஆண்டு வாரியாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் உத்யோக் ஆதார் மெமோராண்டம் (UAM) மற்றும் உத்யம் ரிஜிஸ்ட்ரேஷன் (UR) தளத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை வருமாறு:

01/04/2019 முதல் 31/03/2020 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 498635  தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 50738  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1366  தொழில்முனைவோரும் என மொத்தம் 550739 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

01/04/2020 முதல் 30/06/2020 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 152512   தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 28237  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1073  தொழில்முனைவோரும் என மொத்தம் 181822 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 

01/07/2020 முதல் 31/03/2021 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 473333  தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 16663  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1073  தொழில்முனைவோரும் என மொத்தம் 491069 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

01/04/2021 முதல் 2/02/2022 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 692034  தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 15989  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 633  தொழில்முனைவோரும் என மொத்தம் 708656 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796147

***********


(வெளியீட்டு அடையாள எண்: 1796248) வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali