பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
கோவிட்-19 சமயத்தில் பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி: மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி தகவல்
Posted On:
04 FEB 2022 4:24PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி கூறியதாவது:
நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்ள தற்சார்பு இந்திய திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் குழு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொருளாதாரம் பாதித்த பல துறைகளுக்கான திட்டங்கள், இந்த நிதியுதவி திட்டத்தில் அடங்கியுள்ளன. தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஊக்குவிப்பு திட்டத்தின் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. கோவிட்-19 சமயத்தில் பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை காக்க கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
* குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு அவசரகால மூலதன நிதி அளிக்கப்பட்டது.
* பாதிக்கப்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி மதிப்பில் துணை கடன் வசதிகள் அளிக்கப்பட்டன.
* குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.50,000 கோடி கடனுதவி.
* சிறிய உணவு நிறுவனங்களை முறைப்படுத்த ரூ.10,000 கோடி மதிப்பில் திட்டம்.
* முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1.500 கோடி கடன் வழங்கப்பட்டது.
* குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவோர் மற்றும் தனிநபர்களுக்கு அவசரகால கடன் உத்தரவாத திட்டம்.
* சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5,000 கோடி மதிப்பில் கடன் வசதி.
* பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், 20.40 கோடி பெண்களின் வங்கி கணக்கில் 3 மாதங்களுக்கு தலா ரூ.500 செலுத்தப்பட்டது.
* சுய உதவிக் குழுக்களுக்கான கடன் ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795463
**************
(Release ID: 1795632)
Visitor Counter : 189