விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வேளாண் பேரிடர் மேலாண்மை திட்டம் உருவாக்குவது தொடர்பாக எந்த முன்மொழிவும் இல்லை : மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 04 FEB 2022 4:16PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

பருவநிலைகளை தாக்குபிடிக்கும் வேளாண்மையில் தேசிய புத்தாக்கங்கள் என்ற முன்னணி திட்டத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், வேளாண்துறை அமைச்சகம் ஆகியவை தொடங்கியுள்ளது. பருவநிலைகளை தாக்குபிடிக்கும் பயிர்கள் குறித்த ஆராய்ச்சி, இது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்பருவநிலைகளை சமாளிக்கும் வேளாண் துறையில், கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

* பருவநிலைகளை சமாளிக்கும் பயிர் வகைககள் உருவாக்கப்பட்டுள்ளன. அரிசி, பச்சை பயிறு, சோளம் மற்றும் பருப்பு ஆகியவற்றில் இதுவரை 8 வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பருவநிலையை தாக்குப்பிடிக்கும் வகையில் இடங்கள் சார்ந்த 65 ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகளிடம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளன.

* மேலும், பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டம்,   பாரம்பரிய வேளாண் மேம்பாட்டு திட்டம், மண் வள திட்டம், தேசிய மூங்கில் திட்டம், வேளாண் காடுகள் துணை திட்டம் ஆகியவற்றின் கீழ், பருவநிலைகளை சமாளிக்கும் வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.

நிலையான வேளாண்மைக்கான தேசிய திட்டத்தையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது. திடீரென ஏற்படும் பருநிலை மாற்ற பிரச்னைகளை சமாளிக்க, தேசிய வேளாண் பேரிடர் மேலாண்மை திட்டம் உருவாக்குவது தொடர்பாக எந்த முன்மொழிவும் இல்லை.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795450

----


(Release ID: 1795569) Visitor Counter : 204
Read this release in: English , Urdu