சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
எச்ஐவி / எய்ட்ஸ் மற்றும் காசநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரம்
Posted On:
04 FEB 2022 5:30PM by PIB Chennai
’சுதந்திரப் பெருவிழா’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, எச்ஐவி / எய்ட்ஸ், காசநோய் மற்றும் ரத்த தானம் குறித்து, மத்திய அரசு இரண்டு கட்டங்களாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தியிருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், முதற்கட்டப் பிரச்சாரத்தில் தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள 25 பள்ளிக்கூடங்கள் மற்றும் 100 கல்லூரிகள் உட்பட, நாடு முழுவதும் உள்ள 834 பள்ளிகள் மற்றும் 889 கல்லூரிகளில், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, ஆன்லைன் வினாடி-வினா, சுவரொட்டி தயாரித்தல், கையெழுத்து இயக்கம் போன்ற நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
12 அக்டோபர், 2021-ல் தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட பிரச்சாரத்தின்போது, எச்ஐவி / எய்ட்ஸ், மற்றும் காசநோய் பாதிப்பைத் தடுப்பதுடன், இதுபோன்ற நோயாளிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்பகு துறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம், மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவியைப் பயன்படுத்தி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், எய்ட்ஸ் தொற்றுப் பரவல் தடுப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795420
*****
(Release ID: 1795539)