ஜல்சக்தி அமைச்சகம்

குடிதண்ணீர் தரத்தை பரிசோதிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆய்வகங்கள் குறித்த விவரங்கள்

Posted On: 03 FEB 2022 5:10PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு. ப்ரகலாத் சிங் படேல், கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள தகவல்களின் படி, மாநிலம், மாவட்டம், துணைப்பிரிவு மற்றும்/அல்லது வட்ட அளவில் 2021 குடிநீர் தர சோதனை ஆய்வகங்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற வீடுகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழாய் நீர் இணைப்புக்கள் குறித்த தகவல்கள் மாநிலம்/யூனியன் பிரதேசங்கள், மாவட்டம் மற்றும் கிராமம் வாரியாக ஜல் ஜீவன் இயக்கத்தின் தகவல் பலகை இணைப்பான https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx எனும் முகவரியில் கிடைக்கிறது:

தமிழ்நாட்டில் மாநில அளவில் 1 ஆய்வகமும், மாவட்ட அளவில் 31 ஆய்வகங்களும், துணைப்பிரிவு மற்றும்/அல்லது வட்ட அளவில் 81 ஆய்வகங்களும் என மாநிலம் முழுவதும் 113 ஆய்வகங்கள் உள்ளன.

2019 ஆகஸ்ட் 15 அன்று தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 126.89 லட்சம் வீடுகளும், அவற்றில் 21.76 லட்சம் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புக்களும் இருந்த நிலையில், 29.21 லட்சம் வீடுகளில் தற்போது குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795112

************

 



(Release ID: 1795239) Visitor Counter : 172


Read this release in: Telugu , English , Urdu