சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பருவநிலை மாற்ற பாதிப்புக்களை சந்திப்பதற்கான தேசிய நிதி

Posted On: 03 FEB 2022 3:57PM by PIB Chennai

பருவநிலை மாற்ற பாதிப்புக்களை சந்திக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகபருவநிலை மாற்றத்துக்கான தேசிய  நிதி (என்ஏஎஃப்சிசி) ஏற்படுத்தப்பட்டது. இந்த என்ஏஎஃப்சிசி நிதி, திட்டங்கள் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிதி மூலம் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 30 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தின் கீழ், இந்திய கடலோர பகுதிகளில் அபாயக் கோட்டை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வரையறுத்துள்ளது. இங்கு நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க, தனித்துவமான கடலோர சுற்றுச்சூழலை பாதுகாக்க, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு 2019 அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசங்களில் என்ஏஎஃப்சிசி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வட கேரளாவின் ஈரநிலப் பகுதிகளில் ஒருங்கிணைந்த விவசாயம், பருவநிலை மாற்றத்திற்கேற்ப கடலோர வாழ்விடங்கள் மற்றும் பல்லுயிர் மேலாண்மைமறுவாழ்வு மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் நிலையான வாழ்வாதாரம், ஆந்திராவின் கடலோர பகுதியில் பருவநிலையை சமாளிக்க பால்வளத்துறையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.    இதுவரை, என்ஏஎஃப்சிசி திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலத்துக்கு ரூ.6,35,68,108 வழங்கப்பட்டுள்ளது.

இத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த, மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

-------

 



(Release ID: 1795174) Visitor Counter : 267


Read this release in: English , Urdu , Malayalam