பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மனநலம் பாதித்த குழந்தைகளுக்குச் சான்றிதழ்கள்

Posted On: 02 FEB 2022 5:06PM by PIB Chennai

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்த விதிமுறைகளை, மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு வெளியிட்டதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறை தெரிவித்துள்ளது. மேலும், அறிவுசார் இயலாமை உட்பட பல வகையான இயலாமைகளை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி அறிவித்துள்ளதுஇதில் கடந்த 2020ம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன்படி  மதிப்பீடு செய்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்தவ அதிகாரிகள் சான்றிதழ்களை வழங்க வேண்டும். இதற்கான மருத்துவ ஆணையத்தில் மனநல மருத்துவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 சதவீதத்துக்கு அதிகமான அளவில் இயலாமை உடைய நபர்களைஇயலாதவர்களாக தேசிய மனநல மற்றும் மூளைநரம்பியல் மையம் (நிம்ஹன்ஸ்) கருதுகிறதுஇதுபோன்ற குழந்தைகளுக்கு சமக்ரா சிக்ஸா திட்டம் மூலம் பள்ளிக்  கல்வி அளிக்கப்படுகிறது.

மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி இத்தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794750

-----


(Release ID: 1794821)
Read this release in: English , Urdu , Telugu