சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

போக்குவரத்துத் துறையின் கரியமில வாயு மையத்தைப் போக்குதல்: தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை நிலவரம்

Posted On: 02 FEB 2022 3:45PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வழிமுறைகளை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்துத் துறையின் கரியமில வாயு மையத்தை போக்குவதற்கும், மாற்று எரிபொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக  வெகுஜன உமிழ்வு தரநிலைகளைச்  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல் (-10, -12, -15, -20), நெகிழ்வு எரிபொருள் ( 85 அல்லது 100) மற்றும் டீசல் வாகனங்களுக்கான எத்தனால் கலவை (இடி 95), பயோடீசல், உயிரி எரிவாயு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, மெத்தனால் (எம் 15 அல்லது எம் 100) இரட்டை எரிபொருள், ஹைட்ரஜன் எரிபொருள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

மேலும், மின்சாரப்  போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சாலைப்  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் எடுத்து வருகிறது.

நாட்டில் 966,363 மின்சார வாகனங்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இரு சக்கர வாகனங்கள் 282542, மூன்று சக்கர வாகனங்கள் 647186, நான்கு சக்கர வாகனங்கள் 26335, சரக்கு வாகனங்கள் 3036, பொதுச்  சேவை வாகனங்கள் 2039, சிறப்புப்  பிரிவு வாகனங்கள் 410, அவசரகால ஊர்திகள் அல்லது அமரர் ஊர்திகள் 6, கட்டுமான உபகரண வாகனங்கள் 397, இதர வாகனங்கள் 4412 ஆகும்.

தமிழ்நாட்டில் 50,296 மின்சார வாகனங்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இரு சக்கர வாகனங்கள் 44302, மூன்று சக்கர வாகனங்கள் 4470, நான்கு சக்கர வாகனங்கள் 13, சரக்கு வாகனங்கள் 1281, பொது சேவை வாகனங்கள் 37, இதர வாகனங்கள் 193 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794698

-----



(Release ID: 1794787) Visitor Counter : 261


Read this release in: English , Urdu , Bengali