ஆயுஷ்

தேசிய ஆயுஷ் இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 60 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

Posted On: 01 FEB 2022 6:19PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேசிய ஆயுஷ் இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு  60 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

கடந்த 7 ஆண்டுகளாக 691 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆயுஷ் அமைச்சகத்திற்கு 3,050 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நோய் தொற்றுப் பரவல் காலத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது. 

முன்னதாக, தேசிய ஆயுஷ் இயக்கத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் உற்பத்தியை மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட மருத்துவ தாவரப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 

***************

 



(Release ID: 1794510) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Hindi , Telugu