மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
2022-23 பட்ஜெட் உள்ளார்ந்த வளர்ச்சியை எதிர்நோக்கிய மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளதென திரு தர்மேந்திர பிரதான் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
प्रविष्टि तिथि:
01 FEB 2022 6:52PM by PIB Chennai
மத்திய பட்ஜெட் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு, இதுவரை இல்லாத அளவாக ரூ.1,04,277.72 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். இது 2021-22-ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டைவிட, 11.86% அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
டிஜிட்டல் பல்கலைக்கழகம், ஒரு வகுப்புக்கு ஒரு அலைவரிசை திட்டத்தை 200 தொலைக்காட்சி அலைவரிசைகளாக விரிவுப்படுத்தியிருப்பது, மாநில மொழிகளில், தரமான கல்வியை வழங்குவதில் மாநில அரசுகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிஃப்ட் சிட்டியில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வகுப்புகள் தொடங்க அனுமதித்து இருப்பதையும் அவர் வரவேற்றுள்ளார். DESH-அடுக்கு மின்னணு இணையதளம், நாட்டு மக்களுக்கு திறன் பயிற்சி, மறு திறன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க DESH-அடுக்கு மின்னணு இணையதளம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வரவேற்றுள்ளார். அடுத்த ஆண்டு 5,000 திறன் பயிற்சி மையங்களில், கல்வித்துறையும், திறன் மேம்பாட்டுத்துறையும் இணைந்து தொடங்க உள்ள திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் திரு தர்மேந்திர பிரதான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
----
(रिलीज़ आईडी: 1794503)
आगंतुक पटल : 166