பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற எரிவாயு விநியோக நடைமுறையில் இயற்கை எரிவாயுடன் ஹைட்ரஜனை கலக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் தொடங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 01 FEB 2022 6:01PM by PIB Chennai

நகர்ப்புற எரிவாயு விநியோக நடைமுறையில் இயற்கை எரிவாயுடன் ஹைட்ரஜனை கலக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் தொடங்கியுள்ளது.  மத்தியப்பிரதேச  மாநிலம் இந்தோரிலுள்ள எரிவாயு உற்பத்தி நிறுவனத்தில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. 

ஹைட்ரஜனை கலந்த இயற்கை எரிவாயு விநியோகத்தை இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து கெயில் நிறுவனத்தின் கூட்டு  நிறுவனமான அவந்திகா நிறுவனம் செயல்படுத்தவுள்ளது. 

நகர்ப்புற எரிவாயு விநியோக முறையை மேற்கொள்வதில் உள்ள  தொழில்நுட்பம், வர்த்தக சாத்தியக் கூறுகளை அறிந்து கொள்ளும் வகையில் சோதனை முறையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

கார்பன் பயன்பாட்டைக் குறைத்து ஹைட்ரஜன் கலந்த இயற்கை எரிவாயு விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கான முதல் படியாக இத்திட்டம் இருக்கும். 

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அனுமதியை கெயில் நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ளது.  பசுமையான மற்றும் தூய்மையான சுற்றுச்சூழல் மூலம் வாயு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். 

***************


(रिलीज़ आईडी: 1794491) आगंतुक पटल : 241
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi