அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விஞ்ஞானப் பார்வை மற்றும் ஸ்டார்ட்-அப் ஊக்குவிப்புகளுடன் கூடிய எதிர்காலத்திற்கான பட்ஜெட்: டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2022 5:02PM by PIB Chennai
தமது பொறுப்பில் உள்ள அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், 2022-23 பட்ஜெட் குறித்து ஒரே வரியில் கூற வேண்டுமென்றால், “விஞ்ஞானப் பார்வை மற்றும் ஸ்டார்ட்-அப் ஊக்குவிப்புகளுடன் கூடிய எதிர்காலத்திற்கான பட்ஜெட்” என்று கூறலாம் என்றார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா ஒரு முக்கியமான தசாப்தத்தை எதிர்நோக்குகிறது என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், பொருளாதாரம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய முதன்மையாக இரண்டு காரணிகளால் இது தீர்மானிக்கப்படும் என்றார்.
இந்த முக்கியமான அம்சங்களை மனதில் கொண்டு, கிராமப்புறம், சுகாதாரம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளைத் தொடும் அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் திரு நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794376
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1794447)
வருகையாளர் எண்ணிக்கை : 170