கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்துக்கு ரூ.3,009.05 கோடி ஒதுக்கீடு : 2021-22ம் ஆண்டை விட 13 சதவீதம் அதிகம்

प्रविष्टि तिथि: 01 FEB 2022 5:11PM by PIB Chennai

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்துக்கு 2022-23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.3009.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021-22ம் நிதியாண்டு ஒதுக்கீட்டை விட 13 சதவீதம் அதிகம்.

இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, ‘‘ மேம்பாடு, வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்களை மையமாக கொண்ட தற்சார்பு இந்திய பட்ஜெட்டுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்’’ என தெரிவித்துள்ளார்.

கலாச்சாரத்துறைக்கான மொத்த ஒதுக்கீட்டில் இந்திய தொல்பொருள் ஆய்வுக்கு ரூ.1080.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலா சன்ஸ்கிரிதி விகாஸ் திட்டம் உட்பட கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் மத்திய திட்டங்களை அமல்படுத்த ரூ.532.55 (9 சதவீதம்) கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794379

***************


(रिलीज़ आईडी: 1794438) आगंतुक पटल : 310
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी