சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கீடு : 2021-22ம் ஆண்டை விட 18.42 சதவீதம் அதிகம்
Posted On:
01 FEB 2022 4:19PM by PIB Chennai
சுற்றுலாத்துறை அமைச்சகம் அமல்படுத்திய பல திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்க, இந்த நிதிநிலை அறிக்கையில், சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு ரூ. 2,400 கோடியை, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஒதுக்கியுள்ளார். இந்த ஒதுக்கீடு கடந்த 2021-22ம் ஆண்டு ஒதுக்கீட்டை விட 18.42 சதவீதம் அதிகம்.
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, ‘‘ தற்சார்பு இந்தியா பட்ஜெட்டுக்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். வளர்ச்சியும், பாரம்பரியமும் கைகோர்த்து செல்வது, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிகளவிலான ஒதுக்கீடுகளில் இருந்து தெளிவாக தெரிகிறது’’ என்றார்.
ரூ.2,400 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில், ரூ.1,644 கோடி சுற்றுலாத்துறை கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுதேஷ் தர்ஷன் திட்டத்துக்கு ரூ.1,181.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற திட்டங்களுக்களுக்க ஒதுக்கப்பட்ட நிதியை கீழ்கண்ட இணைப்பில் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794322
***************
(Release ID: 1794430)
Visitor Counter : 188