வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 01 FEB 2022 2:54PM by PIB Chennai

பிரதமரின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான திட்டத்தின்கீழ் நிதிக் கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தொடக்க நிலையில் 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேம்படும் என்றும், பல்வேறு துறைகளில் உள்ள இடைவெளிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேற்கொள்ளும் வகையிலும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் இந்த நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். 

எனினும், மத்திய – மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படமாட்டாது.  இந்த சிறப்பு நிதி ஒதுக்கீட்டின்கீழ் ஐஸால் புறவழிச்சாலை கட்டமைப்புப் பணிகள் 500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

*****


(रिलीज़ आईडी: 1794403) आगंतुक पटल : 283
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali