பாதுகாப்பு அமைச்சகம்
அகில இந்திய அளவில் சிறுவர்களுக்கான குதிரையேற்றப் பயிற்சிக்கான தேர்வு மீரட் ராணுவ மையத்தில் உள்ள ஆர்விசி கல்லூரியில் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது
Posted On:
01 FEB 2022 10:04AM by PIB Chennai
சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்லும் வகையில், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ராணுவம் சார்பாக சிறுவர்களுக்கான குதிரையேற்றப் பயிற்சி தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வை, மீரட் ராணுவ மையத்தில் உள்ள ஆர்விசி கல்லூரி, சிறுவர்கள் விளையாட்டு நிறுவனத்துடன் இணைந்து பிப்ரவரி 8-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை நடத்த உள்ளது.
சிறுவர்களின் உடல் திறன் மற்றும் தொழில்நுட்பத் திறன் ஆகியவை தேர்வின் போது பரிசோதிக்கப்படும். இப்பரிசோதனையை ராணுவ விளையாட்டு மருத்துவ மையம் இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு, இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒப்புதல் வழங்குவார்கள்.
பதிவு நேரம்
தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் மீரட் ராணுவ மையத்தில் உள்ள ஆர்விசி மையம் மற்றும் கல்லூரிக்கு பிப்ரவரி 8-ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணிக்குள் வரவேண்டும்.
தகுதி
- ரெஜிமென்ட் மருத்துவ அதிகாரி மற்றும் விளையாட்டு மருந்து மைய நிபுணர் ஆகியோர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- உடலில் எந்தப் பகுதியிலாவது பச்சைக் குத்திக் கொண்டவர்கள் தேர்வு செய்யப்படமாட்டார்கள்.
- வயதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மணிக்கட்டுப் பகுதியில் எக்ஸ்ரே பரிசோதனை நடத்தப்படும்.
ஆவணங்கள்
- பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளருடன் மீரட்டில் உள்ள ஆர்விசி கல்லூரிக்கு காலை 7 மணிக்கு முன்பாக வரவேண்டும். அப்போது உரிய ஆவணங்களை அவர்கள் கொண்டுவர வேண்டும். சான்றிதழ்களுடன் 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களையும் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களையும் கொண்டுவர வேண்டும்.
- நகராட்சி பதிவாளர் அளித்த சிறப்பு சான்றிதழ்
- ஆதார் அட்டை
- தாசில்தாரால் வழங்கப்பட்ட இருப்பிடச்சான்று
- பள்ளிச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்
- தாசில்தாரால் அளிக்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ்
- சாதி சான்றிதழ்
- குதிரையேற்ற பயிற்சி விளையாட்டில் சிறப்பிடம் பெற்றதற்கான சான்றிதழ் இருந்தால் கொண்டுவர வேண்டும். சர்வதேச தேசிய ராணுவ மாநில மாவட்ட அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும்.
- அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான 10 புகைப்படங்கள்
- பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறான தகவல்களை அளித்தது தெரியவந்தால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கான செலவிடப்பட்ட பயிற்சிக் கட்டணத்தை பெற்றோர் அல்லது காப்பாளர் அரசு கருவூலத்திற்கு திரும்ப செலுத்த வேண்டும்.
- பயிற்சிக்கான தேர்வின் போது காயம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு ஆர்விசி மையம் மற்றும் கல்லூரி பொறுப்பேற்காது.
மேலும் விவரங்களுக்கு: அதிகாரி, சிறுவர்கள் விளையாட்டு நிறுவனம், ஆர்விசி மையம் மற்றும் கல்லூரி, மீரட் கண்டோன்மென்ட், உத்தரப்பிரதேசம் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
-----
(Release ID: 1794272)
Visitor Counter : 147