நிதி அமைச்சகம்

நீலாசல் இஸ்பாட் நிகாம் (என்ஐஎன்எல்) நிறுவனத்தின் தனியார் மயமாக்கத்துக்கு ஒப்புதல்

Posted On: 31 JAN 2022 2:31PM by PIB Chennai

நீலாசல் இஸ்பாட் நிகாம் நிறுவனத்தின் 93.71 சதவீத பங்குகளை, டாடா ஸ்டீல் லாங் தயாரிப்பு நிறுவனம் ரூ. 12,100 கோடிக்கு வாங்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் ஆகியோர் அடங்கிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்  குழுவின் மாற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

நீலாச்சல் இஸ்பாட் நிகாம் நிறுவனம்(என்ஐஎன்எல்)  எம்எம்டிசி, என்எம்டிசி, பெல், மெகான் என்ற 4 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், ஒடிசா அரசின் 2 பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஓஎம்சி மற்றும் இபிகால் ஆகியவற்றின் கூட்டு முயற்சி நிறுவனங்கள்  ஆகும்.  இந்த 1.1 மில்லியன் டன் உற்பத்தி திறனுடன் கூடிய என்ஐஎன்எல், ஒடிசா மாநிலம் கலிங்கா நகரில் உள்ளது.  இந்த நிறுவனம் அதிக நஷ்டத்தில் இயங்கியதால், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதியிலிருந்து மூடிய நிலையில் உள்ளது.  இந்நிறுவனத்துக்கு 31.3.2021-ம் தேதி நிலவரப்படி ரூ.6,600 கோடி கடன் உள்ளது. இந்நிறுவனம் ரூ.3,487 கோடி எதிர்மறை வளர்ச்சியைக்  கண்டது. 31.3.2021ம் தேதி நிலவரப்படி ரூ.4,228 கோடி இழப்பைச்  சந்தித்தது.

மத்திய அரசுக்கு இந்த நிறுவனத்தில் எந்தப்  பங்கும் இல்லை. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குதாரர்கள்  வாரியத்தின் வேண்டுகோள்படி, ஒடிசா அரசின் சம்மதத்துடன் கொள்கை அடிப்படையில் என்ஐஎன்எல் நிறுவனங்களின் பங்குகளை விற்க பங்கு விலக்கல் மற்றும் பொதுச்  சொத்து மேலாண்மைத்துறை(டிஐபிஏஎம்) கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஒப்புதல் அளித்தது.

அதன்படி 6 பொதுத்துறை நிறுவனங்களின் 93.71 சதவீதப்  பங்குகளை திறந்தவெளி சந்தை மூலம், ஏல முறையில் விற்பனை செய்தவத்கான இந்தப்  பரிவர்த்தனை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.  அமைச்சகங்களுக்கு இடையேயான குழு, பங்குவிலக்கு குறித்த செயலாளர்கள் குழு, (சிஜிடி), அதிகாரம் பெற்ற பொருளாதார  விவகாரங்களுக்கான அமைச்சரவைக்  குழுவின் மாற்று அமைப்பு ஆகியவற்றின் பல கட்ட ஆலோசனைக்குப்பின் இந்தப்  பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது.  32.47 சதவீத பங்குகளை வைத்திருக்கம் ஒடிசா அரசின் நிறுவனங்களான ஓஎம்சி மற்றும் இபிகால் ஆகியவையும், இந்த முடிவில் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கெடுத்தன.

இந்த விற்பனைக்கான விருப்பமனு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி கோரப்பட்டது. பல விருப்பமனுக்கள் கடந்த 2021 மார்ச் 29ம் தேதி வரை பெறப்பட்டன.

இறுதியில் தகுதியான ஏலதாரரர்களான ஜிந்தால் ஸ்டீல் மற்றும் எரிசக்தி நிறுவனம் மற்றும் நல்வா ஸ்டீல் மற்றும் எரிசக்தி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டமைப்பு, ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம்டாடா ஸ்டீல் லாங் தயாரிப்புகள் நிறுவனம்(டிஎஸ்எல்பி)  ஆகியவை தங்கள் ஏலங்களை தாக்கல் செய்தன.

அதிகத்  தொகை(ரூ. 12,100 கோடி)க்கு டாட் ஸ்டீல் லாங் நிறுவனம் ஏலம் கேட்டது. இதனால் இவற்றின் ஏலத்தைப்  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்  குழுவின் மாற்று அமைப்பு ஏற்றுக் கொண்டது. அதன்படி, ஏலத் தொகையில் 10 சதவீதத் தொகை   தற்போது, எஸ்க்ரோ கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

முடிவு தேதியில், பங்குகள் ஏலம் எடுத்த நிறுவனத்துக்கு மாற்றப்படும். மீதத் தொகை, பங்குதாரர்கள்  கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி மேற்கொண்ட ஒப்பந்தத்தத்தின் படிப்  பெறப்படும். இதன் ஒரு பகுதி கடனைத்  திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும். மீதத் தொகை பங்குதாரர்களுக்கு,அவர்களின் பங்குகள் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793798



(Release ID: 1793849) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Marathi , Hindi