வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் உண்ணத் தயார்நிலை பொருட்களின் ஏற்றுமதி 2021-22 ( ஏப்ரல்- அக்டோபர்) –ல் 24% அதிகரிப்பு
Posted On:
30 JAN 2022 2:27PM by PIB Chennai
இந்தியாவின் உண்பதற்கு தயார் நிலையில் உள்ள உணவுப் பொருட்கள், பரிமாறுவதற்கு தயார் நிலையில் உள்ள பொருட்கள் என்ற நுகர்வோர் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த பத்தாண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
உண்பதற்கு தயார் நிலையில் உள்ள உணவுப் பொருட்கள் பிரிவில், மதிப்பு கூடுதல் பொருட்களின் ஏற்றுமதியை நம்பியுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், கடந்த பத்தாண்டில் 12 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில், .வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தின் கீழ், உண்ணத் தயாராக உள்ள பொருட்களின் ஏற்றுமதி 2.1 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உண்ணத் தயார் நிலையில் உள்ள பொருட்களின் ஏற்றுமதி 2021-22-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 24% அதிகரித்து $394 மில்லியனாக இருந்தது.
உண்பதற்கு தயார் நிலை பொருட்கள் பிரிவில், பிஸ்கட் மற்றும் பேக்கரி பொருட்கள், இனிப்பு வகைகள், காலை உணவு தானியவகை, வேபர்ஸ், இந்திய இனிப்பு வகை, நொறுக்கு தீனிகள் உள்ளிட்டவை அடங்கும். 2020-21-ல் இவற்றின் ஏற்றுமதி 89% என்ற அதிக அளவில் இருந்தது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793666
*****
(Release ID: 1793672)
Visitor Counter : 339