சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பேருந்துகளில் தீ எச்சரிக்கை அமைப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான அறிவிக்கை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2022 3:02PM by PIB Chennai

டைப்- III பேருந்துகளில் தீ எச்சரிக்கை அமைப்பு மற்றும் தீ பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப் படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஜனவரி 27-ம் தேதி வெளியிட்டுள்ளது. இதற்காக ஏஐஎஸ்-135-ல் திருத்தம் செய்யப்படுகிறது.

தற்போதைக்கு ஏஐஎஸ்-135ன்படிபேருந்து என்ஜின் பகுதியில்  ஏற்படும் தீ எச்சரிக்கை அமைப்பு தீத்தடுப்பு நடைமுறைகளுக்கான அறிவிக்கை உள்ளது. பயணிகள் பகுதியில் தீ விபத்தால் காயம்  ஏற்படுவதற்கு அதிக அளவிலான வெப்பமும்புகையுமே காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெப்பம்புகை ஆகியவற்றை வெளியேற்றும் கூடுதல் வசதிகள் இருந்தால்இத்தகைய காயங்களைத் தவிர்க்க முடியும்.

பயணிகள் பகுதியில் வெப்பத்தை 50 டிகிரிக்குள் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர தீப்  பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்ட பேருந்து வடிவமைப்பை மேற்கொள்ள இது வழிவகுக்கும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கிலச்  செய்திக்குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793495

****


(வெளியீட்டு அடையாள எண்: 1793502) வருகையாளர் எண்ணிக்கை : 284
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Telugu