வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 27 JAN 2022 5:53PM by PIB Chennai

இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி கடந்த மாதம் 1.67 பில்லியன் அமெரிக்க டாலரை தொட்டது. இது 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1.25 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 49 சதவீதம் அதிகரித்து 11.0 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இது கடந்த 2020ம் ஆண்டு இதே காலத்தில் 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது

கடந்த 2021 ஏப்ரல் முதல் நவம்பர்  மாதம் வரை  எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யபட்ட முதல் 5 நாடுகளில், அமெரிக்கா (18%), ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(16.6%), சீனா (7.6 %), நெதர்லாந்து (4.5%) மற்றும் ஜெர்மனி (4.2%) ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் செல்போன்கள் அதிகப்  பங்கு வகிக்கின்றன. லேட்டாப்கள், டேப்லட்கள், டி.வி மற்றும் ஆடியோ , தொழிற்சாலை எலக்ட்ரானிக் பொருட்கள், வாகன எலக்ட்ரானிக்ஸ், எல்இடி பல்புகள் மற்றும் தொலைத்  தொடர்பு சாதனங்களும் அதிகளவில் இடம் பெற்றுள்ளன.

கடந்த நிதியாண்டில் (மார்ச் 2020 - ஏப்ரல் 2021) வரை மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதி 11.11 பில்லியன் டாலர். இத்துறை இதுவரை கண்ட அனைத்து சாதனைகளையும் முறியடிக்கவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792993

----


(வெளியீட்டு அடையாள எண்: 1793035) வருகையாளர் எண்ணிக்கை : 324
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी