பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த குடியரசு தின அலங்கார ஊர்திக் குழுவுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மதிய விருந்தளித்தார்

Posted On: 27 JAN 2022 5:05PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஜம்மு & காஷ்மீரைச்  சேர்ந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்  குழுவுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் மதிய விருந்தளித்தார்.

நடன இயக்குநர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுடன் ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த கலைஞர்கள் வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச்  சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கிய ஆதரவு, ஊக்குவிப்பு மற்றும் அவரது விருந்தோம்பல் ஆகியவன  குறித்து குழு உறுப்பினர்கள் தங்கள் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முந்தைய நிகழ்வுகளைப் போலல்லாமல், புதுதில்லியின் ராஜ்பாதையில் இந்த வருடம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒரு அரிய குடியரசு தின விழாவாக இருந்தது என்று குறிப்பிடுவது பொருத்தமானது. இதில் இடம் பெற்ற ஜம்மு & காஷ்மீர் அலங்கார ஊர்தி ஜம்மு பிராந்தியத்தின் கலாச்சாரம் மற்றும் கலையை பெரிதும் காட்சிப்படுத்தியது.

அதன் முன்புறத்தில் வைஷ்ணோ அன்னையின் முகமும், கடந்த சில ஆண்டுகளாக திரு மோடி அரசால் அப்பகுதியில் நிறுவப்பட்ட உலகின் உயரமான ரயில் பாலம், எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களின் காட்சி மாதிரிகளும் இடம்பெற்றன. ஜம்முவின் பிரபலமான நாட்டுப்புற பாடல்களான "சாதா-இ-ஜம்மு", "சாதி பக்ரி பெஹ்சான்" ஆகியவற்றின் அடிப்படையில் பின்னணி இசை மற்றும் பாடல் வரிகள் அமைந்திருந்தன.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில், ஜம்மு & காஷ்மீரின் ஒவ்வொரு பகுதிக்கும் சமமான வளர்ச்சி மற்றும் சமமான கவனத்தை வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். அனைத்து பிராந்தியங்களிலும் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமும் நம்பிக்கையையும் சுயமரியாதையையும் இது ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792979

-----




(Release ID: 1793014) Visitor Counter : 206


Read this release in: English , Urdu , Hindi , Punjabi