ஜல்சக்தி அமைச்சகம்
மிசோரம் மாநிலத்தில் தெற்கு மவுபாங் கிராமம், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத முதல் கிராமமாக உருவாகியுள்ளது.
प्रविष्टि तिथि:
27 JAN 2022 4:52PM by PIB Chennai
மிசோரம் மாநிலத்தின் ஐசாவல் மாவட்டத்தில் உள்ள தெற்கு மவுபாங் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கழிவறைகள் உள்ளன. திட, திரவ கழிவு மேலாண்மை வசதிகளும் தூய்மை இந்தியா திட்டத்தின் வழிகாட்டுதல்களுடன் செய்யப்பட்டுள்ளன. அதனால் இந்த கிராமம் மிசோரம் மாநிலத்தின் முதல், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள 116 வீடுகளில் 649 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தைத் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இடமாக மாற்றுவதில் கிராம மக்கள் அனைவரும் பங்காற்றியுள்ளனர்.
இந்த கிராமத்தில் உள்ள 3 பள்ளிகள், 2 அங்கன்வாடி மையங்கள், ஒரு சமுதாய கூடம், பாரத் நிர்மான் ராஜீவ்காந்தி சேவா கேந்திரா அரங்கம் ஆகியவற்றில் கழிவறை வசதிகள் உள்ளன. பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகளுக்குத் தனித்தனிக் கழிவறைகள் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் இந்த கிராமத்துக்குத் தேசிய பஞ்சாயத்து விருதாக ரூ.5 லட்சம் பரிசு கிடைத்தது. அதன் மூலம் இந்த கிராமத்தில் திடக் கழிவு மேலாண்மை வசதிகள் செய்யப்பட்டு, 98 சதவீத வீடுகளின் குப்பைகளை மட்கச் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792971
----
(रिलीज़ आईडी: 1793005)
आगंतुक पटल : 294