அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியா – பிரான்ஸ் இடையிலான அறிவியல் & தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் பாஸ்டியர் நிறுவனமும் மனித ஆரோக்கியத்தில் முன்னேற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

Posted On: 26 JAN 2022 3:07PM by PIB Chennai

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான அறிவியல் & தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்பில் முக்கிய மைல் கல்லாக, சுகாதார ஆராய்ச்சியில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமமும்பிரான்ஸ் நாட்டின் பாஸ்டியர் நிறுவனமும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.   அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமமும், பாஸ்டியர் நிறுவனமும் கூட்டாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளன.   புதிதாக மற்றும் மீண்டும் தோன்றும் தொற்று நோய்கள் மற்றும் பரம்பரைக் கோளாறுகள்  மற்றும் வலுவான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரசேவைத் தீர்வுகளை இந்தியா மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு மட்டுமின்றிஉலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.   மேலும், சாத்தியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை மேம்படுத்தவும்மனித ஆரோக்கியத்தில் நவீன மற்றும் புதிதாக உருவாகும் பிரச்சினைகளில், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்திற்குட்பட்ட நிறுவனங்கள்/ஆய்வுக்கூடங்கள் மற்றும், பாஸ்டியர் நிறுவனத்தின் சர்வதேச கட்டமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.   

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனரும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் சேகர் சி.மன்டே-யும், பிரான்ஸ் நாட்டின் பாஸ்டியர் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஸ்டீவர்ட் கோல் ஆகியோர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.   

இந்த ஒப்பந்தத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் திரு.இமானுவேல் லெனைன்இந்தியா -பிரான்ஸ் இடையிலான அறிவியல்- தொழில்நுட்ப உறவில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.   பிரான்ஸ் நாட்டிற்கான இந்தியத் தூதர் மற்றும் இந்தியத் தூதரகம் சார்பில், துணைத்தூதர் பிரபுல்லசந்திர சர்மா பங்கேற்று, இந்த ஒத்துழைப்புக்கு முழு ஆதரவு அளிப்பதாகத்  தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792808

 

*******



(Release ID: 1792830) Visitor Counter : 240