நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி அமைச்சகத்தின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மூலதனச் செலவில் 28.33 % வளர்ச்சியடைந்துள்ளன

Posted On: 26 JAN 2022 1:25PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், டிசம்பர் 2021-உடன் முடிவடைந்த காலத்தில், மூலதனச் செலவில் 28.33%  வளர்ச்சியை எட்டியதன் வாயிலாக சாதனை படைத்துள்ளது.   2020 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலத்தில் எட்டப்பட்ட சாதனையான ரூ.9,822. 28 கோடியுடன் ஒப்பிடுகையில், நிலக்கரி அமைச்சகத்தின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.12,605.75 கோடி மூலதனச் செலவை மேற்கொண்டதன் மூலம்,  கோவிட் பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு பெரும் உத்வேகம் அளித்துள்ளன.   இந்த மூலதனச் செலவு சாதனை, நிலக்கரி அமைச்சகத்தின் வருடாந்திர இலக்கில் 75%  ஆகும்.  

******


(Release ID: 1792829) Visitor Counter : 242
Read this release in: English , Urdu , Hindi , Marathi