பாதுகாப்பு அமைச்சகம்
அந்தமான் & நிகோபாரில் குடியரசு தினக் கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2022 3:00PM by PIB Chennai
73-வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேரில் உள்ள நேதாஜி அரங்கில் 26 ஜனவரி 2022 அன்று அணிவகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினரான துணைநிலை ஆளுநர், அட்மிரல் (ஓய்வு) டி கே ஜோஷி அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியக் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் சந்தீப் ஆர் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை மற்றும் அந்தமான் & நிக்கோபார் காவல்துறையினர் பங்கேற்றனர்.
தலைமை விருந்தினரால் தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அரசின் அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் கொவிட் நெறிமுறைகள் நிகழ்வின் போது பின்பற்றப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792805
****
(வெளியீட்டு அடையாள எண்: 1792820)
வருகையாளர் எண்ணிக்கை : 277