நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி குறித்த விவரப் புத்தகத்தை வெளியிட்டார் நிலக்கரித்துறை செயலாளர் டாக்டர் அனில் குமார் ஜெயின்

Posted On: 25 JAN 2022 5:29PM by PIB Chennai

‘இந்திய நிலக்கரி குறித்த விவரங்கள் 2020-21 என்ற புத்தகத்தை நிலக்கரித்துறை அமைச்சகத்தின் நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பு இன்று வெளியிட்டது. இந்த புள்ளிவிவர வெளியீட்டை , நிலக்கரித்துறை அமைச்சக செயலாளர் டாக்டர். அனில் குமார் ஜெயின் தில்லியில் வெளியிட்டார்.

இந்த புத்தகத்தில் நிலக்கரி மற்றும் லிக்னைட் துறைகளின் செயல்பாடு குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன.  இதில் நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் இருப்பு குறித்த தரவாரியான விவரங்கள் அடங்கியுள்ளன.  இந்த புத்தகத்தில், கடந்த சில ஆண்டுகளாக நிலக்கரி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விலைகள் குறித்த தகவல்களும் உள்ளன.

அனைத்து தரப்பினர், கொள்கை உருபாக்குபவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை மற்றும் நிறுவனங்களுக்கான விரிவான விவரங்களை இந்த புத்தகம் வழங்குகிறது.  நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பு மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையளங்களிலும் இந்த விவரப் புத்தகத்தை பார்வையிட முடியும். இவற்றை கீழ்கண்ட இணைப்பில் காணவும்:

http://www.coalcontroller.gov.in/

https://coal.gov.in/

***********

 


(Release ID: 1792574) Visitor Counter : 203


Read this release in: English , Urdu , Hindi