நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி கட்டுப்பாட்டாளரின் விரிவாக்கப்பட்ட அலுவலகம் தில்லியில் திறப்பு
प्रविष्टि तिथि:
25 JAN 2022 5:34PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பின் விரிவாக்கப்பட்ட அலுவலகம், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளரான டாக்டர் அனில் குமார் ஜெயினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பின் முக்கிய அலுவலகமாக இது செயல்பட்டு பின்வரும் கடமைகளை நிறைவேற்றும்.
* சுரங்க திட்டம் மற்றும் சுரங்க மூடலுக்கு ஒப்புதல்
* சுரங்க திறப்பு மற்றும் மறு திறப்புக்கு அனுமதி
* சுரங்க மூடல் திட்டங்களின் இணக்கத்தை கண்காணித்தல்
* தூய்மை நிலைய நிராகரிப்பு கொள்கையை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்
* கட்டண ஆணையர்
* நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி புள்ளிவிவரங்களின் சேகரிப்பு, தொகுத்தல், வெளியீடு
* நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பின் நிர்வாக மற்றும் கணக்குகள் தொடர்பான விஷயங்கள்
* நிதி ஆயோக், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் சர்வதேச முகமைகளுக்கு ஆதரவு
நிலக்கரி அமைச்சக இணை செயலாளர்கள், நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பின் இயக்குநர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பின் விரிவாக்கப்பட்ட அலுவலகத்தின் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792540
**********
(रिलीज़ आईडी: 1792565)
आगंतुक पटल : 187