எரிசக்தி அமைச்சகம்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், ஊரக மின்விசை நிறுவனம் (REC), 21 நிதியாண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான அளவுருக்களில் முழுமையான மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது
Posted On:
25 JAN 2022 2:10PM by PIB Chennai
மத்திய அரசுக்குச் சொந்தமான வங்கி-சாரா நிதி நிறுவனமும், மத்திய மின்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் நவரத்னா நிறுவனமுமான, ஊரக மின்விசை நிறுவனம் (REC), 21நிதியாண்டில், நிதியமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறை நிர்ணயித்த இலக்குகள் மற்றும் சாதனைகளில் அதிகபட்ச மதிப்பெண்ணான 100-ஐ எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான தீவிர மற்றும் விருப்பமுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளது.
மத்திய அரசின் 32 துறைகளின் (மின்சாரம், ரயில்வே, எஃகு, சுரங்கம், கனரகத் தொழில்கள், பெட்ரோலியம், பாதுகாப்பு உள்ளிட்ட) கட்டுப்பாட்டில் செயல்படும் 123 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில், ஊரக மின்விசை நிறுவனம் மட்டுமே, இந்த சாதனையை எட்டியுள்ளது.
மின்துறையின் இந்த மாபெரும் நிறுவனம், 21-ம் நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவாக ரூ.8,362 கோடி நிகர லாபம் ஈட்டி, முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 71% அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பும், 24% உயர்ந்து, 31 மார்ச் 2021 நிலவரப்படி ரூ.43,426 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஊரக மின்விசை நிறுவனம், மின்சாரத் துறையை நம்பகமான, வலுவான மற்றும் புத்தெழுச்சி பெற்றதாக மாற்ற தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
*****
(Release ID: 1792526)
Visitor Counter : 229