வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வர்த்தக பாதுகாப்பு பிரிவு (டிடிடபிள்யூ) நடவடிக்கையால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான வரி 11.67 சதவீதத்திலிருந்து 2.82 சதவீதமாக குறைப்பு

Posted On: 24 JAN 2022 6:47PM by PIB Chennai

இந்திய ஏற்றுமதியாளர்களின் நலனைப்  பாதுகாக்க, அவர்களுக்கு எதிராக இதர நாடுகள் நடத்தும் விசாரணைகளில் வர்த்தகத்  தீர்வுகள் தலைமை இயக்குனரகம்(டிஜிடிஆர்) தனது வர்த்தக பாதுகாப்பு பிரிவு மூலம் உதவி வருகிறது.

இந்தப் பிரிவு மத்திய மற்றும் மாநில அரசின் பல துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்தியா நலனை பாதுகாக்கிறது. மானியங்களுக்கு எதிராக வெளிநாடுகள் விதிக்கும் இறக்குமதி வரிகள் விஷயத்தில், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்திய அரசின் நிலைபாட்டை இந்தப் பிரிவு எடுத்துரைக்கிறது.

இதன் மூலம் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு, இதர நாடுகள் குறைந்த வரிகள் விதிப்பதை  இந்த வர்த்தகப்  பாதுகாப்புப் பிரிவு உறுதி செய்கிறது.

இந்தப்  பிரிவின் நடவடிக்கை காரணமாக இந்திய பொருட்களுக்கு குறைந்தபட்சம் 3 முதல் 6 சதவீத வரிகளை இதர நாடுகள் விதிக்கின்றன. வர்த்தகப் பாதுகாப்புப் பிரிவின் தலையீட்டால் துருபிக்கிக்காத இரும்புப்  பொருட்களுக்கு ஐரோப்பிய ஆணையம் மிகக்  குறைந்த அளவில் 0.45 சதவீத வரி விதித்தது.

இந்தியாவில் இருந்து வரும் பாலிஎத்திலீன், டெரிபேத்தலேட் பிலிம், தகடு ஆகியவற்றுக்கு   2018ம் ஆண்டில் 11.67 சதவீத வரி விதிக்கப்பட்டது. வர்த்தகப் பாதுகாப்புப்  பிரிவின் நடவடிக்கையால் இது 2.82 சதவீதமாக குறைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792237

*********


(Release ID: 1792308) Visitor Counter : 199


Read this release in: English , Urdu , Hindi