அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நாடு முழுவதும் உள்ள பெண் சாதனையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாடல்; தமிழகத்தில் இருந்து வினிஷா உமாசங்கர் பங்கேற்பு
Posted On:
24 JAN 2022 5:17PM by PIB Chennai
தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும், நாடு முழுவதும் உள்ள பெண் சாதனையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாடினார். தமிழ்நாட்டை சேர்ந்த வினிஷா உமாசங்கர் இதில் பங்கேற்றார்.
புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார இணைப்புடன் நிலைத்தன்மை மிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
குழந்தைகள் புதுமையாக சிந்திக்கவும், பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், கடந்த கால தடைகளை உடைத்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளவும் பல்வேறு அரசு திட்டங்கள் நம்பிக்கையையம் உத்வேகத்தையும் அளிக்கின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
"புதிய இந்தியாவின் கனவை நனவாக்குவதற்கு புதுமை முக்கியம்" என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவுரையைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், இளம் சாதனையாளர்களுக்கு அரசின் அனைத்து ஆதரவும் உதவியும் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
இந்த உரையாடலில் பங்கேற்ற தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் தனது சூரிய சக்தி இஸ்திரி வண்டி குறித்து விளக்கினார். தில்லியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி மான்யா ஜோஷி இயற்கை பேரழிவுகளுக்கான முன்னெச்சரிக்கை திட்டம் குறித்து விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792194
*********
(Release ID: 1792238)
Visitor Counter : 228