புவி அறிவியல் அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் சந்திப்பு
Posted On:
21 JAN 2022 3:47PM by PIB Chennai
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்த கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், இந்தியாவின் "நீலப் பொருளாதாரத்தின்" ஜோதியாக விளங்கும் "ஆழ்கடல் இயக்கத்தில்" ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் ஆழ்கடலை வளங்களுக்காக ஆராய்வதற்கும், கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டிற்காக ஆழ்கடல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் ஆழ்கடல் இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்தில் முக்கியமான தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு செங்கோட்டையில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி சுதந்திர தின உரை நிகழ்த்திய போது, 21-ம் நூற்றாண்டில் ஆழக்கடல் திட்டம் இந்தியாவின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
ஆழ்கடல் இயக்கம் என்பது இந்திய அரசின் நீலப் பொருளாதார முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் பணி முறை திட்டமாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1791522
********************
(Release ID: 1791626)
Visitor Counter : 195