தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021 டிசம்பர் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்கள்: தமிழகம் முதலிடம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 JAN 2022 5:07PM by PIB Chennai

2021 டிசம்பர் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் தலா 5 புள்ளிகள் உயர்ந்து, வேளாண் தொழிலாளர்களுக்கு 1097-ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு 1106 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் வரிசையில் 1290 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 861 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1276 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 915 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்ச அதிகரிப்பு தமிழ்நாட்டில் (தலா 20 புள்ளிகள்) ஏற்பட்டுள்ளது . முக்கியமாக காய்கறிகள் மற்றும் பழங்கள், வெங்காயம், பச்சை/காய்ந்த மிளகாய், புளி போன்றவற்றின் விலை உயர்வு இதற்கு காரணமாகும்.

கோதுமை, பருப்பு வகைகள், வெங்காயம், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியின் காரணமாக, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்சமாக சரிவை இமாச்சலப் பிரதேசம் (முறையே 12 புள்ளிகள் மற்றும் 14 புள்ளிகள்) சந்தித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791227  

----


(வெளியீட்டு அடையாள எண்: 1791253) வருகையாளர் எண்ணிக்கை : 276
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी