அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா – இலங்கை அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கழிவுநீர் தொழில்நுட்பங்கள், உயிரி தொழில்நுட்பம், நீடித்த வேளாண்மை, பெரிய அளவிலான புள்ளிவிவர பகுப்பாய்வு & செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய துறைகளில் பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளது
Posted On:
20 JAN 2022 5:13PM by PIB Chennai
இந்தியாவும் – இலங்கையும் தங்களுக்கு இடையே தற்போதுள்ள அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளன. கழிவுநீர் தொழில்நுட்பங்கள், உயிரி தொழில்நுட்பம், நீடித்த வேளாண்மை, பெரிய அளவிலான புள்ளிவிவர பகுப்பாய்வு & செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழிற்சாலை ஒத்துழைப்பு போன்ற புதிய துறைகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் இரு நாடுகளும் சிறப்புக் கவனம் செலுத்த உள்ளன.
இந்தியா – இலங்கை அறிவியல் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்புக்கான 5-வது கூட்டுக் குழுவின் கூட்டம் ஜனவரி 20, 2022 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் இந்திய தரப்புக்கு தலைமை வகித்து பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஆலோசகர் மற்றும் தலைவர் திரு.எஸ்.கே.வர்ஷ்னே, இந்தியா – இலங்கை இடையேயான உறவுகள் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை என்றார். இரு நாடுகளும் தலை சிறந்த அறிவாற்றல், கலாச்சார மற்றும் மத ரீதியான பிணைப்புகளை கொண்ட நாடுகள் என்றும் அவர் குறிப்பிட்டார். அண்மைக் காலங்களில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் அதிகரித்து வருவதுடன், கல்வி மற்றும் பிற துறைகளிலும் ஒத்துழைப்பு மேம்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இலங்கை தரப்புக்கு தலைமை வகித்த அந்நாட்டு திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறை செயலாளர் திருமதி. தீபா லியாங்கே, இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால நட்புறவை உறுதிபடுத்தியதுடன் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஒத்துழைப்பை இலங்கை வரவேற்பதாக தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791229
***************
(Release ID: 1791243)
Visitor Counter : 291