அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியா-இஸ்ரேல் தொழில்துறை ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புதுமை நிதியின் நோக்கத்தை விரிவுபடுத்த இந்தியா மற்றும் இஸ்ரேலின் வல்லுநர்கள் பரிந்துரை

Posted On: 19 JAN 2022 4:08PM by PIB Chennai

இந்தியா-இஸ்ரேல் தொழில்துறை ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புதுமை நிதியின் நோக்கத்தை விரிவுபடுத்துவது குறித்து அதன் எட்டாவது ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் இந்தியா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆலோசித்தனர்.

5.5 மில்லியன் டாலர் மதிப்பிலான 3 கூட்டு ஆராய்ச்சி & மேம்பாட்டு திட்டங்களுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்ததோடு பரந்த இந்தியா-இஸ்ரேல் கூட்டுச் சூழலியலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தனர்.

“இந்தியா-இஸ்ரேல் தொழில்துறை ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புதுமை நிதி திட்டம் நிறைய சாத்தியங்களைக் கொண்டுள்ளது. இந்த கூட்டம் புதிய சிந்தனைகள், எப்படி முன்னேறுவது என்பது பற்றிய புதிய வழிகாட்டுதல்களை எங்களுக்கு வழங்கும்,” என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளரும் இந்தியாவின் இணை தலைவருமான டாக்டர் எஸ் சந்திரசேகர் கூறினார்.

"விவசாயம், பாதுகாப்பு மற்றும் பிற முக்கிய துறைகளுக்கு இதுவரை முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் வாய்ப்பு உள்ளது, இஸ்ரேல் மற்றும் இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலியலில் அதிக ஆன்லைன் சந்திப்புகளை நடத்த வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்திகிறது,” என்று அவர் மேலும் கூறினார். 

ஜனவரி 16-ம் தேதி ‘புதுமைகளுக்கான ஸ்டார்ட் அப் நாள்’ என மாண்புமிகு பாரதப் பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவுக்கு ஒரு பெரிய தொடக்கமாகும், என்று கூறிய அவர், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் 50-வது ஆண்டு இது என்பதால், தொழில்கள் மேலும் முன்னோக்கி வருவதன் மூலம் இது ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும்," என்றார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790952

**********



(Release ID: 1791017) Visitor Counter : 251


Read this release in: English , Urdu , Hindi , Bengali