பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

டிசம்பர் 2021-க்கான பெட்ரோலிய பொருட்களின் மாதாந்திர உற்பத்தி அறிக்கை

Posted On: 19 JAN 2022 1:02PM by PIB Chennai

1.கச்சா எண்ணெய் உற்பத்தி

2021 டிசம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2509.98 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது இந்த மாதத்திற்கான இலக்கை விட 5.19% குறைவாகும். மேலும் 2020 டிசம்பர் மாத உற்பத்தியை விட 1.81% குறைவாகும்.  2021 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 22,378.40 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தி இலக்கை விட 4.47% குறைவு; உற்பத்தியை விட 2.63% குறைவு.

2.இயற்கை எரிவாயு உற்பத்தி

2021 டிசம்பரில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2,896.69 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. இது 2020 டிசம்பர் உற்பத்தியை விட 19.45% அதிகமாகும். ஆனால் மாதாந்திர இலக்கை விட 14.93% குறைவாகும். 2021 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 25,673.90 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 21.53% அதிகமாகும். ஆனால் இந்த காலத்திற்கான இலக்குடன் ஒப்பிடுகையில் 8.75% குறைவாகும்.

3. சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்

2021 டிசம்பர் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 21,482.88 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது 2020 டிசம்பரை விட 2.18% அதிகமாகும். ஆனால் இந்த மாதத்திற்கான (2021 டிசம்பர்) இலக்கை விட 0.44% குறைவாகும். 2021 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் மொத்தம் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 1,77,215.39 டிஎம்டி-ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தியை விட 10.51% அதிகமாகும். ஆனால் இந்த காலத்திற்கான இலக்கை விட 0.97% குறைவாகும்.

4. பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி

2021 டிசம்பர் மாதத்தில்  பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 22,754 டிஎம்டி ஆக இருந்தது. இது இம் மாதத்திற்கான இலக்கை விட 3.27 சதவீதமும், 2020 டிசம்பர் உற்பத்தியை விட 5.93 சதவீதமும் அதிகமாகும். 2021 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் மொத்த உற்பத்தி 1,86,008 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் 10.02 சதவீதம் அதிகமாகும். ஆனால் இந்த காலத்திற்கான இலக்கை விட 0.28 சதவீதம் குறைவாகும்.

***************



(Release ID: 1790999) Visitor Counter : 215


Read this release in: English , Urdu , Hindi