சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி மரியாதை

प्रविष्टि तिथि: 18 JAN 2022 7:04PM by PIB Chennai

புதுதில்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் நாள்தோறும் சூரிய அஸ்தமனத்தின் போது நடைபெறும் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி கலந்து கொண்டு, நாட்டுக்காக உயிர்த் தியாகம் புரிந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

போர் நினைவுச் சின்னத்தை சுற்றிப்பார்த்த திரு கிஷண் ரெட்டி, அங்கு சித்தரிக்கப்பட்டிருந்த போர் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், நாட்டுக்காக உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் வந்து அதனைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தேசப்பக்தி உணர்வோடு இந்த நினைவுச் சின்னத்திற்கு வரவேண்டியது அவசியம் என அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790772

*************


(रिलीज़ आईडी: 1790789) आगंतुक पटल : 273
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu