அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சுற்றுச்சூழல் அழுத்தத்தின் கீழ் நீடித்த உணவு உற்பத்தி குறித்த இந்தியா – பிரிட்டன் கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரை
Posted On:
18 JAN 2022 6:00PM by PIB Chennai
சுற்றுச்சூழல் அழுத்தத்தின் கீழ் நீடித்த உணவு உற்பத்தி குறித்த இந்தியா – பிரிட்டன் கூட்டத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் ஓய்வூதியம், பொதுமக்கள் குறைதீர்ப்பு. அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் காணொலி வாயிலாக உரையாற்றினார். உணவுப் பாதுகாப்பு மற்றும் பட்டினியில்லாத நிலையை அடைய இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவும் பிரிட்டனும், வேளாண்மை, மருத்துவம், உணவு, மருந்துத்துறை, பொறியியல், பாதுகாப்பு போன்ற அறிவியல் பரிமாணங்களின் உலகளவிலான ஒத்துழைப்பை வலியுறுத்த வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார். மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், பிரிட்டனின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள மத்திய அரசின் நோக்கம் விவசாயிகள் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே உணவு ஊட்டவேண்டும் என்பதுதான் என டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பு, அவசியம் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு ஏற்ப பெருந்தொற்றுக் காலத்தில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற வகையில், உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதென அவர் தெரிவித்தார். உணவுப் பாதுகாப்புக்கு உள்ளூர் உணவு தொகுப்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790743
************
(Release ID: 1790755)