சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

வன அலுவலர்கள் குரலற்றவர்களின் குரலாக இருந்து நாட்டின் பரந்து விரிந்த இயற்கை வளங்களின் பாதுகாவலர்களாக திகழ வேண்டும்: திரு. புபேந்தர் யாதவ்

Posted On: 17 JAN 2022 5:29PM by PIB Chennai

வன அலுவலர்கள் குரலற்றவர்களின் குரலாக இருந்து, மனிதநேயமிக்க அணுகுமுறையுடன் உள்ளூர் சமுதாயத்தின் தேவைகளுக்கேற்ப பணியாற்ற வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு. புபேந்தர் யாதவ் இன்று கூறினார்.

டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் பயிற்சி பெறும் 2020 பிரிவை சேர்ந்த அறுபத்தி நான்கு இந்திய வனப்பணி  பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய அவர், சுற்றுச்சூழல் தொடர்பான சவால்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அதே சமயத்தில் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை தற்போதைய தேசிய தலைமையின் கீழ், நாடு விரும்புவதாக கூறினார்.

எனவே,  நிலையானத்தன்மை மிக்க வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில்  தற்போதைய காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது என்று இளம் அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்தார். நாட்டின் பரந்து விரிந்த இயற்கை வளங்களின் எஜமானர்களாக இல்லாமல் பாதுகாவலர்களாக வன அலுவலர்கள் திகழ வேண்டும் என்று அவர் கூறினார்.

இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவுபேவும் பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றினார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் செயலாளர் திருமிகு. லீலா நந்தன் மற்றும் தலைமை இயக்குநர் (வனம்) மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் திரு. சி.பி. கோயல் ஆகியோரும் பயிற்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1790526

*************

 



(Release ID: 1790550) Visitor Counter : 196


Read this release in: English , Urdu , Hindi , Telugu