நிலக்கரி அமைச்சகம்
என் எல் சி இந்தியா நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி
Posted On:
17 JAN 2022 2:47PM by PIB Chennai
என் எல் சி இந்தியா நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி காணொலிக்காட்சி மூலம் வெளியிட்டார். என் எல் சி நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்காக இந்த புதிய மறுவாழ்வுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் என்எல்சி இந்தியா நிறுவனம் முக்கிய பங்காற்றுவதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வாய்ப்புக்களை அளிக்கும் மிக இலகுவான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்கிய என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி பாராட்டினார்.
பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் இழப்பீட்டை இந்த புதிய மறுவாழ்வுக் கொள்கை உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார். புதிய கொள்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகள் அதிகளவில் உள்ளன என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். திறன் இந்தியா திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க தமிழக அரசுடன் என்எல்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் திரு பிரகலாத் ஜோஷி கூறினார். நிலையான வாழ்வாதாரத்திற்கும், ஒவ்வொரு கிராமத்தையும் தற்சார்புடையதாக மாற்றவும் இந்த புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கை வழிவகுக்கும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
கிராம மக்களுக்கு பயனளிப்பதோடு, என்எல்சி நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த புதிய கொள்கை வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநில வேளாண் துறை அமைச்சர் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு சி வி கணேசன் மற்றும் எம்.பி., எம்எல்ஏ., க்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***************
(Release ID: 1790490)
Visitor Counter : 314