மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

'சிப்ஸ் டு ஸ்டார்ட் அப்' திட்டத்திற்கு கல்வித்துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

प्रविष्टि तिथि: 16 JAN 2022 6:37PM by PIB Chennai

இந்தியாவை அடுத்த செமிகண்டக்டர் மையமாக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் திட்டத்தை தொடர்ந்து, 'சிப்ஸ் டு ஸ்டார்ட் அப்திட்டத்திற்கு 100 கல்வித்துறைஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள்ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 

 ஐந்து வருடங்களில் 85 ஆயிரம் உயர்தர மற்றும் தகுதி வாய்ந்த பொறியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் 100 ஐஐடிஎன்ஐடிஐஐஐடிஅரசு தனியார் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.  

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் சார்ந்த அமைப்பான சிடாக் என அழைக்கப்படும் முன்னேறிய கணினியிலுக்கான மேம்பாட்டு மையம் இத்திட்டத்தின் மைய முகமையாக செயல்படும். www.c2s.gov.in எனும் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின்படி திட்ட விண்ணப்பங்களை ஜனவரி 31, 2022 வரை சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அமைப்புகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790350


(रिलीज़ आईडी: 1790376) आगंतुक पटल : 341
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu