மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஜனவரி 17 முதல் 21 வரை பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அடையாள வாரம் கொண்டாடுகிறது
प्रविष्टि तिथि:
16 JAN 2022 1:21PM by PIB Chennai
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், ஜனவரி 17 முதல் 21 வரை அடையாள வாரம் கொண்டாட பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை திட்டமிட்டுள்ளது.
இதனையொட்டி, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. பொம்மைகள் மற்றும் விளையாட்டு தொடர்பான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு, 27-வது தேசிய வருடாந்திர மாநாடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.
அடல் புத்தாக்க இயக்கத்தின் ஒத்துழைப்புடன் வெபினார் 17-ம்தேதி நடைபெறும்.கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், பள்ளி முதல்வர்கள், பெற்றோர், ஒருங்கிணைப்பாளர்கள் என ஏராளமானோர் இதில் பங்கேற்பார்கள். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை தெரிந்துகொள்ளும் விழிப்புணர்வை பெற்றோர், ஆசிரியர்கள் இடையே ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790310
****
(रिलीज़ आईडी: 1790325)
आगंतुक पटल : 238